×

மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி, மே 10: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதே போல், மாவட்டத்தில் சில இடங்களில் 3வது நாளாக நேற்று முன்தினமும் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம்(மில்லி மீட்டரில்) வருமாறு: தளி 10, அஞ்செட்டி 6.40, பாரூர் 3.20, என மொத்தம் 19.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.

The post மாவட்டத்தில் பரவலாக மழை appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri district ,Dinakaran ,
× RELATED ஆடு, மாடு, கோழிகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க தடுப்பு முறைகள்